ஹெச் ராஜா தலைமையில் மூவர் குழு.. நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.. வேகமெடுக்கும் பாஜக!
Author: Udayachandran RadhaKrishnan9 February 2024, 2:58 pm
ஹெச் ராஜா தலைமையில் மூவர் குழு.. நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.. வேகமெடுக்கும் பாஜக!
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் சமீபத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தின. ஏற்கனவே திமுக அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
அதன்படி திமுக கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை ஒரு புறம் நடத்தி வர மறுபுறம் தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்கள் கருத்துக்களை கேட்டு அறிந்து வருகின்றனர். அதிமுகவும் தமிழகம் முழுவதும் மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஹெச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெச்.ராஜா தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை முதல் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கிறது.
இந்த குழுவானது நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுகளை அறிந்து மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் தயாரிக்க உள்ளனர்.
இந்த குழுவானது மக்களிடம் சென்று மக்களின் அடிப்படைத் தேவைகள், மக்களின் கோரிக்கை அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரித்து பாஜக தலைமையிடம் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஒப்படைக்க உள்ளனர். இந்த குழுவில் கே.பி ராமலிங்கம், கார்வேந்தன், ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.