50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… அடுத்தடுத்து 8 பேர் பலி… அதிர்ச்சி தரும் கோர விபத்து!!!
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
பேருந்து, வேன்கள், கார்கள் என வாகனங்களில் சாரை சரையாக அணி வகுத்து வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்கு பேருந்து ஒன்று வந்துள்ளது.
ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு பேருந்தில் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் தடுப்புச்சுவரில் மோதிய கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளத்தில் கவிழ்தது.
இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த சுற்றுலாப்பயணிகள், அச்சத்தில் அலறினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர். காயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.