அணில்களின் காப்பாளன் – அணில்களுக்காக வாழும் வியாபாரி..!

Author: Vignesh
3 July 2024, 5:38 pm

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த வியாபாரியான திருப்பதி இவர் நரசிங்கம் சாலையில் தனது தந்தை காலத்தில் இருந்து கடந்த 50 வருடங்களாக எண்ணெய் கடை ஒன்று வைத்து நடத்திவருகிறார்.

இவர் சிறு வயதில் இருந்து அணில், பூனை ,வீட்டு விலங்குகள் பறவைகள் மீது மிகுந்த அன்போடும் பாசத்தோடும் இருப்பதால் அதனை வளர்த்துவருகிறார். இந்நிலையில், திருப்பதி தனது கடையின் அருகே இருந்த கோவிலில் உள்ள மரத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அணில் குட்டிகள் கீழே விழுந்ததை பார்த்து அவற்றை கடையில் எடுத்து வந்து உணவுகளை வழங்கிவுள்ளார்.

இதனையடுத்து, அந்த அணிலானது நாள்தோறும் திருப்பதியுடன் அன்பாக பழக தொடங்கியது. இதனால் அந்த அணிலானது அவரது உடம்பு முழுவதிலும் இறங்காமல் சுற்றி சுற்றி வர தொடங்கியது. எப்போதும், திருப்பதி கடைக்கு வந்தவுடன் டிச்சு என கூப்பிட்டவுடன் அணில் அவரது கையில் ஏறிக்கொண்டு தோளில அமர்ந்து கொள்கிறது.

அதனை கொஞ்சி கொஞ்சி விளையாடிய பின்னர் தனது வியாபாரத்தை தொடங்குகிறார். அவர் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அணில் தோளிலும் இடுப்பிலும் ஏறி உட்கார்ந்து கொண்டாலும் அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வியாபாரம் பார்த்துவருவார். இதனால் கடைக்கு வரக்கூடிய வியாபாரிகள் திருப்பதியின் உடல் முழுவதும் அணில் சுற்றிவருவதை வியப்புடன் பார்த்துச் செல்வார்கள்.

அணில் வளர்ந்தவுடன் அதனை அப்படியே விட்டுவிடுவார் அது தானாக ஆங்காங்கே சென்றுவிடும் இதனையறிந்த பொதுமக்கள் ஆங்காங்கே காயம் பட்டு கிடக்க கூடிய அணில்கள் காக்கைகள் பறவைகளை திருப்பதியிடம் கொடுத்துவருகின்றனர். இதையடுத்து அணில், பறவைகள் ஆகியவற்றை பராமரித்து அதனை மீண்டும் பறக்க விட்டுவிடுவார் ஆனால் அணில்கள் மீது அளவில்லா பாசம் வைத்துள்ள திருப்பதி 100க்கும் மேற்பட்ட அணில்களை வளர்த்து மரங்களில் விட்டுள்ளார்.

அணில்களை வளர்ப்பதால் கடையில் உள்ள பொருட்களை கடித்த உடன் அந்த பொருட்களை அணிலுக்கே உணவாக வைத்து விடுவேன் என்றார். தனக்கு பிள்ளைகளை விட அணில்கள் மீது தான் பாசம் அதிகம் எனவும் வீட்டில் மனைவி, பிள்ளைகள் சாப்பிடாவிட்டால் கூட எந்த வித கவலையும் இருக்காது ஆனால் அணில் சாப்பிடாமல் இருக்க விட மாட்டேன் எனவும், அணில்கள் இருப்பதால் வெளியூர்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவேன் என்கிறார்.

குறிப்பாக நீண்ட நாட்களாக தான் வளர்த்த அணில் ஒன்று தன்னை விட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட தருணம் குறித்து கண்கிழங்கி பேசினார். ஒவ்வொரு அணிலுக்கும் என்றும் தனித்தனி பெயர் வைக்க கிடையாது என்றாலும், தாய் இல்லாமல் தவித்த இரண்டு அணில் குஞ்சுகளுக்கு இங்ஃபில்லர் மூலம் காய்ச்சிய பாலை கொடுக்க அவற்றை உற்சாகமாக பிடித்து குடித்து வருகிறது அந்த பிஞ்சு அணில் குஞ்சுகள் தரையில் சிதறி கிடக்கும் தானியங்களை பொறித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாது மதிய உணவிற்காக தான் கொண்டு வந்த சோறு எடுத்து கையில் போட அணில் தனக்கே உரித்த பானியில் மெல்ல கொறித்து தள்ளியது. இன்றைய காலகட்டத்தில் தாயுள்ளத்தோடு சுயநலம் பாராமல் அண்ணல்களைப் பேணிப் பாதுகாத்து வரும் இவருடைய செயல் பாராட்டுதலுக்குரியது.

  • adhik-ravichandran-shared-that-after-aaa-movie-flop-no-actors-were-ready-to-meet-me-but-ajith-kumar-said-okay-to-his-film AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்