சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2025, 1:18 pm
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி புறநகர் பகுதியில் வந்தபோது அமராவதி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக ராயலசீமா ரயில் நிறுத்தப்பட்டது.
இதையும் படியுங்க: நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…
இந்த நிலையில் சிக்னலுக்காக காத்திருந்த ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு 1.30 மணி அளவில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது ஏறிய கொள்ளையர்கள் ஐந்து பேர் கத்தியை காண்பித்து மிரட்டி தங்கம், பணம் மற்றும் பயணிகளுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிச் சென்றனர்.

அவ்வாறு ரயிலுக்குள் நுழைந்து 10 பெட்டிகளில் பயணிகளிடம் கொள்ளையடித்தனர். ரயில் திருப்பதி வந்த பிறகு ரயில்வே போலீசில் பாதிக்கப்பட்ட 20 பேர் புகார் அளித்தனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
