இருசக்கர வாகனம் மீது மரம் விழுந்து விபத்து : தந்தை, மகன் படுகாயம்… ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 6:38 pm

வேலூர் : குடியாத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் தந்தை மகன் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மின்சாரத் துறையில் பணிபுரியும் வெங்கடேசன் (வயது 48).

இவர் தனது மகன் கோபியுடன் (வயது 22) குடியாத்தத்தில் இருந்து சொந்த ஊரான பரதராமி மத்தூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது குடியாத்தம் அடுத்த ராமாலை, தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் இருந்த காய்ந்த மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்துள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை வெங்கடேசன் மகன் கோபி இருவரும் படுகாயம் அடைந்திருந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பரதராமி காவல் துறையினைர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!