கனமழை காரணமாக ஓடும் ரயில் மீது விழுந்த மரம்… உடனே ரயில் நிறுத்தம்.. தவித்த பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 10:41 am

கனமழை காரணமாக ஓடும் ரயில் மீது விழுந்த மரம்… உடனே ரயில் நிறுத்தம்.. தவித்த பயணிகள்!!

திண்டிவனம் அருகே காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. காரைக்காலில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, ரயில் ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய மரம் ஒன்று முறிந்து ரயில் மீது விழுந்தது.

இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு இரும்பு பாதை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள், ரயில் மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர் மழையின் காரணமாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்கள் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. ரயில் மேல் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டு சென்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!