அமலாக்கத்துறை வழக்கில் திருப்பம்… அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 6:34 pm

ஏற்கனவே ஆட்கொணர்வு மனுவை செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த நிலையில் தற்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் தனது கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது என்றும் அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தனது கூடுதல் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கு நாளை மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அவரது மனைவி கூடுதல் மனு தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!