அவதூறு வழக்கில் திருப்பம்… நேரில் ஆஜரான சி.வி.சண்முகம் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 2:53 pm

அவதூறு வழக்கில் திருப்பம்… நேரில் ஆஜரான சி.வி.சண்முகம் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!

தமிழக அரசை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது போடப்பட்ட நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 20. 7. 2023 அன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடுத்தார்.

இதனை அடுத்து தொடரப்பட்ட புதிய வழக்கில் சம்மன் கிடைக்கப்பெற்று இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜர் ஆனார்.

வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அமைச்சரின் வழக்கறிஞர் ராதிகா செந்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வழக்கை மூன்று மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதி பூர்ணிமா உங்களது வக்காலத்தை 19ஆம் தேதி முன்வைக்குமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து இவ்வழக்கு வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 293

    0

    0