களைகட்டிய ராணுவ தளவாட கண்காட்சி… பார்வையாளர்கள் ஆச்சரியம்..!

Author: Vignesh
22 August 2024, 3:02 pm

கோவை அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில் இரண்டு நாள் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ராணுவ செயற்கைக்கோள், போர்க்கப்பல்கள், பெயிலி பாலத்தின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ராணுவம் மற்றும் மீட்பு பணித்துறை குறித்து பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசமாகும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி