கோவை தனியார் கல்லூரியில் யுவன் சங்கர் ராஜா பங்கேற்ற நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விபத்து : பெண் காவலர் உட்பட 6 பேர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 7:28 pm

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் ( எஸ்என்எஸ் ) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் யூடியூப் சேனல் ( ப்ளேக்சிப் ) நடத்தும் நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜாவை அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மாணவர்கள் மத்தியில் பாடல் பாடியுள்ளார். இசை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடிய பொழுது மாணவ மாணவிகள் நடனமாடியுள்ளனர். இந்த நிலையில் அருகிலுள்ள தடுப்பு சுவர் சரிந்து கீழே விழுந்ததில் காவலர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரவணம்பட்டி காவல் நிலையத்துல் பணிபுரியும் பெண் எஸ்எஸ்ஐ மற்றும் 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஒரு சினிமா பிரபலம் வருவதை முன்னிட்டு அங்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லையா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!