அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து காட்டு யானை ஆக்ரோஷம்.. யானையை சீண்டிய நபரால் பரபரப்பு : ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan12 January 2023, 12:59 pm
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஆசனூர் கொள்ளேகால் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து நின்றது.
பின்னர் சிறிது நேரம் கழித்து பேருந்தை நோக்கி வந்த காட்டு யானை பேருந்தின் முன் பக்க கண்ணாடியை தனது தும்பிக்கையால் அடித்து உடைத்தது.
இதனைக் கண்டு அச்சமடைந்த பேருந்து உள்ளே இருந்த பயணிகள் அச்சுத்துடன் சத்தம் எழுப்பியதால் யானை பின்னோக்கி சென்றது.
https://vimeo.com/788554596
இதனால் ஆசனூர் கொள்ளேகால் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.