புதியதாக கட்டப்பட்ட வீட்டில் அழையா விருந்தாளியாக வந்த காட்டு யானை : சொல்வதை கேட்டு தலையாட்டி சென்ற நெகிழ்ச்சி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2022, 9:07 pm
கோவை மாவட்டம் சின்னத் தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ஒற்றை யானை ஒன்று கதிர்நாயக்கன்பாளையம் செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாயி ஒருவரின் வீட்டுக்குள்ளே நுழைய கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்தது.
இதனை அடுத்து வீட்டில் இருந்தார்கள் யானை வீட்டுக்கு வெளியே நிற்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த யானையை மெதுவாக போ போ என கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.