வீடு புகுந்து கேட்டை உடைத்த காட்டு யானை : கோவை தொண்டாமுத்தூர் மக்கள் ஷாக்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2024, 11:39 am

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டு வருகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவரை காட்டு யானை ஒன்று தாக்கியதில் அவரது காயங்கள் ஏற்பட்டன.

அதுமட்டுமின்றி அதே பகுதியில் யானையை விரட்ட முற்பட்ட இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திப்பாளையம் பகுதியில் நேற்றிரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ஊரை சுற்றி உலா வந்தது.

அப்போது ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த யானை வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி செல்ல முற்பட்டபோது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 197

    0

    0