ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. விரட்டிய இளைஞர்கள் : ஆக்ரோஷமாக திருப்பி தாக்கியதால் பலியான இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2024, 11:45 am

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பூலாம்பட்டி வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டினர். பின்னர் மீண்டும் இரவு பத்து மணியளவில் வந்த ஒற்றைக் காட்டு யானை ஆக்ரோஷமாக அங்கு, இங்கும் சுற்றி திரிந்ததால் யாரும் காட்டு யானை அருகே செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் கூறினர்.

இருந்த போதிலும் யானையை விரட்ட முற்பட்ட விராலியூர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 24 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

இவருடைய நண்பர் ஹரிஷ் வயது 22 தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இருவரும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட பின்னாடியே ஓடிச் சென்று உள்ளனர்.

ஆக்ரோஷத்தில் இருந்த காட்டு யானை இவர்களைப் பார்த்து திரும்பி தாக்க தொடங்கியது. அதில் ஹரிஷ் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் யானை துரத்தியதில் தடுமாறி கீழே விழுந்த கார்த்தியை யானை தூக்கி வீசி மிதித்து சென்றதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

பின்னர் காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹரிஷ் அங்கு உள்ள டாட்டா ஏ.சி வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

காட்டு யானையை விரட்ட வேண்டாம் என்று வனத் துறையினர் பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் கேட்காமல் யானையை விரட்டச் சென்ற வாலிபர் யானை தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளது. அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ