சாலையோரம் நின்று கொண்டிருந்தவரை முட்டி தூக்கி வீசிய காட்டெருமை : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan15 December 2022, 4:39 pm
தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர் மீது காட்டெருமை ஆக்ரோஷமாக மோதிய காட்சி இணையதில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி விவசாய நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளான காட்டெருமை உள்ளிட்டவை பொதுமக்களை அச்சுறுத்தையும் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.
தொடர்ந்து இன்று கொடைக்கானல் ஏழு வழி சாலை அருகே உலா வந்த காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமாக ஓடிவந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ரவி என்பவரை முட்டி தூக்கி எரிந்துள்ளது.
தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
மேலும் நகர் பகுதியில் அடிக்கடி காட்டெருமை உலா வருவது தொடர் கதையாக உள்ளது .தொடர்ந்து பொது மக்களை காட்டெருமை தாக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே உலா வரும் காட்டெருமை கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.