Complaint பண்ணாலும் ஆக்ஷன் எடுக்கல.. காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!
Author: Vignesh2 September 2024, 3:25 pm
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்ய மறுப்பு : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் லட்சுமி, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளார். புகாரை வாங்காமல் வழக்கு பதிவு செய்ய மறுத்ததால் மனம் உடைந்த லட்சுமி, இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார்.
வளாகத்திற்குள் வந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவரை தடுத்து காப்பாற்றினர். தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.