ஃபிரஷர் குக்கர் வெடித்து பெண் உயிரிழந்தது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சாந்தி (45). இந்த நிலையில், இவர் இன்று வழக்கம் போல் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்து உள்ளார். அப்போது, திடீரென குக்கர் வெடித்துச் சிதறி உள்ளது.
இதில், சமையல் செய்து கொண்டிருந்த சாந்தி தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சாந்தியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், மருத்துவமனைக்கு வந்து, சாந்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குக்கர் விபத்தை தடுப்பது எப்படி? எவ்வளவு கால இடைவெளியில் குக்கருக்கான பராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டும் என்பதை பிரஷர் குக்கரை வாங்கும்போதே, அதன் பாதுகாப்பு கையேட்டைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதனை பழைய கடைக்கு போட்டுவிடக் கூடாது. அதேபோல், நீராவி வெளியேறும் வால்வு தெளிவாகவும், சுத்தமாகவும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரியாணி கடையை முடித்துவிட்டு தினமும் ‘அங்கு’ சென்ற நபர்.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!
மேலும், பிரஷர் குக்கரில் எவ்வளவு உணவுப் பொருட்களை நிரப்ப வேண்டுமோ, அதனையே நிரப்ப வேண்டும். அதற்கு மேல் நிரப்பக் கூடாது. தொடர்ந்து, உணவுப்பொருட்களை சமைக்கும் போது அதன் அளவு அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, தண்ணீர் இல்லாமல் பிரஷர் குக்கரை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
(பொறுப்புத்துறப்பு: குக்கர் விபத்துகளில் இருந்து தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட வழிமுறைகள் பல்வேறு தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இதற்கு, Update News 360 ஒருபோதும் பொறுப்பேற்காது)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.