கோவையில் கொரோனாவுக்கு பெண் பலி… மீண்டும் அச்சம் தரும் தொற்று : மக்கள் பீதி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2023, 9:09 am

கொரோனா தொற்று ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.கொரோனா காரணமாக தற்போது 92 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி இணை நோயான, கேன்சர், கல்லீரல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அந்த பெண்ணை கொரோனா வார்டுக்கு மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 365

    0

    0