ஹேர் டிரையரால் துண்டான விரல்கள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Author: Hariharasudhan
21 November 2024, 2:10 pm

கர்நாடகாவில் ஆன்லைனில் வாங்கிய ஹேர் டிரையர் வெடித்து பெண்ணின் இரு கை விரல்களும் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகல்கோட்: கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டம், இலகல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபன்னா யார்னால். இவரது மனைவி பசவராஜேஸ்வரி யார்னால். பாபன்னா யார்னால், ராணுவ வீரராக பணியாற்றிய நிலையில், 2017ஆம் ஆண்டில் வீர மரணம் அடைந்தார். எனவே, தற்போது பசவராஜேஸ்வரி தனியாக வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சசிகலா. இந்த நிலையில், இவர் ஆன்லைனில் ஹேர் டிரையர் (Hair dryer) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த ஹேர் டிரையர் கொரியர் மூலம் நவம்பர் 15ஆம் தேதி வீட்டுக்கு வந்து உள்ளது. அப்போது, பார்சலைக் கொண்டு வந்த நபர் சசிகலாவுக்கு கால் செய்து பார்சல் வந்து விட்டதாக கூறி உள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய சசிகலா, “நான் வீட்டில் இல்லை. தற்போது வெளியூர் வந்து இருக்கிறேன். எனவே, பார்சலை பக்கத்து வீட்டில் உள்ள பசவராஜேஸ்வரி என்பவரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்” எனக் கூறி உள்ளார். அதேநேரம், சசிகலா, பசவராஜேஸ்வரிக்கு போன் செய்து, ஹேர் டிரையரை வாங்கி வைக்கும்படி கூறி உள்ளார்.

HAIR DRYER BLAST IN KARNATAKA

இதையடுத்து ஹேர் டிரையரை வாங்கிய பசவராஜேஸ்வர், தனது வீட்டில் அதனை பயன்படுத்த முயன்று உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஹேர் டிரையர் வெடித்துச் சிதறி உள்ளது. பின்னர், இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பசவராஜேஸ்வரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமா பிரபலங்கள் விவாகரத்து எல்லாமே நாடகமா? காரணமே Sham Divorce தான்!

இந்த விபத்தில் அவரது இரு கைகளிலும் உள்ள விரல்கள் பலத்த சேதமடைந்தனர். அதிலும், அவரது ஒரு கை செயலிழந்ததால், மருத்துவரின் அறிவுரைப்படி, கை துண்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஹேர் டிரையர் வெடித்ததில் அவரது இரு கைகளில் உள்ள விரல்களும் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மேலும், மின்கசிவு காரணமாக ஹேர் டிரையர் வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி உள்ள பாகல்கோட் போலீசார், வெடித்த ஹேர் டிரையரின் நிறுவனம் விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், இச்சம்பவம் தொடர்பாக ஹேர் டிரையரை ஆர்டர் போட்ட சசிகலாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 132

    0

    0

    Leave a Reply