அரசுப் பேருந்தில் கிடந்த பெண் சடலத்தின் மொபைல்.. விசாரணையில் பகீர் தகவல்கள்!

Author: Hariharasudhan
23 November 2024, 1:44 pm

கேரளாவில், தகாத உறவில் இருந்த பெண்ணைக் கொலை செய்து புதைத்துவிட்டு, சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, தனது சகோதரியைக் காணவில்லை என விஜயலட்சுமியின் தங்கை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த நிலையில், அம்பலப்புழா பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கிடந்து உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதன் பேரில், அப்பெண்ணின் சடலம் காணாமல் போன விஜயலட்சுமி என தெரிய வந்து உள்ளது.

பின்னர், விஜயலட்சுமியின் செல்போன் மூலம் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர். அப்போது, அதன் சிக்னல் எர்ணாகுளம் பகுதியில் காட்டி உள்ளது. அதேநேரம், கரூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் உடன் விஜயலட்சுமி அடிக்கடி பேசி வந்ததும் தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, ஜெயச்சந்திரனைப் பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் மீன்பிடி துறைமுகப் பகுதியில் வியாபாரம் செய்து வந்து உள்ளார். திருமணம் ஆகாத ஜெயச்சந்திரன் உடன் விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்து உள்ளனர்.

Ernakulam Bus stand murder

அதிலும், ஜெயச்சந்திரன் வீட்டிற்கும் விஜயலட்சுமி அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த நேரத்தில், செல்போனில் வேறொரு நபருடன் விஜயலட்சுமி பேசி வந்தது ஜெயச்சந்திரனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடங்காத ஜெயச்சந்திரன், விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டி உள்ளார்.

இதையும் படிங்க: 14 மாதமாக ஆணுக்குச் செல்லும் மகளிர் உரிமைத் தொகை.. கலெக்டர் வரை சென்றாலும் நீதியில்லை!

பின்னர், விஜயலட்சுமியின் சடலத்தை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்து உள்ளார். அது மட்டுமல்லாமல், விஜயலட்சுமியின் செல்போனை எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்தில் வைத்திவிட்டுச் சென்று உள்ளார். பின்னர், இந்த செல்போனைக் கண்டறிந்த அரசுப் பேருந்து நடத்துனர், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார் என்பதும் தெரிய வந்து உள்ளது.

தற்போது, எர்ணாகுளம் காவல் நிலையத்தில் இருந்த விஜயலட்சுமியின் செல்போனைக் கைப்பற்றி உள்ள கருநாகப்பள்ளி போலீசார், இந்தக் கொலையில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 135

    0

    0