தமிழ்நாட்டுச் சடங்கே வேண்டாம்.. கலங்க வைக்கும் ஆடியோ.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Hariharasudhan
24 October 2024, 12:14 pm

கன்னியாகுமரியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், சுசீந்திரம் தெற்கு மண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கொட்டாரம் பகுதியில் மின்வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவை மாவட்டம், கோவில் பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாபு என்பவரின் மகள் சுருதி பாபு (24) என்பவர் உடன், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தின் போது, 45 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்கப் பணம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், தம்பதி சுசீந்திரத்தில் உள்ள கார்த்திக் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் உடன் சுருதி பாபுவின் மாமியார் செண்பகவள்ளியும் வசித்து வந்துள்ளார். இவ்வாறு 3 மாதங்கள் கடந்துள்ளது. பின்னர், மாமியார் தரப்பில் வரதட்சணை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது மிகவும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு, சுருதி தனது தாயாருக்கு மாமியார் செய்து வரும் கொடுமைகள் குறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்து உள்ளார். இதனை அறிந்த சுருதியின் தந்தை பாபு, தனது குடும்பத்துடன் மகளைப் பார்பதற்காக வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, சுருதியின் கணவர் கார்த்திக்கின் உறவினர் ஒருவர், சுருதியின் தந்தை பாபுவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரது உடல் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது என்றும் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோவையில் இருந்து மீண்டும் குமரி மாவட்டம் வந்துள்ளனர். மேலும், தனது மகளை வரதட்சணை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர் எனவும், இது தற்கொலை இல்லை கொலை என பெற்றோர், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அவரது வீட்டில் சுருதி தற்கொலை செய்து கொண்டதால், தற்போது ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு சுருதி அனுப்பிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அந்த ஆடியோவில், “எனக்கும் எனது கணவருக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. எல்லா பிரச்னையும் என் மாமியாரால் தான் வருகிறது. கணவர் சாப்பிட்ட பிறகு தான் நான் சாப்பிட வேண்டுமாம். என் கணவர் பக்கத்தில் நான் உட்காரக் கூடாது எனக் கூறுகிறார். தமிழ்நாட்டு கலாச்சாரப்படி என்னடைய இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதாக சொல்லி யாராவது வந்தால், அது தேவையே இல்லை. அப்படி செய்ய விடாதீர்கள். இவர்களின் கலாச்சாரத்தில் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். மின்தகன மேடையில் வைத்து சுவிட்ச் ஆன் செய்து விட்டாலே போதும். இவர்கள் கட்டுப்பாட்டின் படி ஒன்றும் செய்துவிட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நண்பனின் மனைவியுடன் தீரா காதல்.. உச்சத்திற்கு சென்ற தகாத உறவு.. இளைஞர் பரிதாப பலி!

மேலும், “திருமணம் நடந்த சில நாட்களிலேயே எனது மகள் மாமியார் கொடுமைக்கு ஆளானார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக சுருதி பணிபுரிந்து வந்தார். இறுதியாக வாயஸ் மெசேஜ் அனுப்பினார். இதன் பிறகு அவர் எதுவும் செய்யவில்லை. அப்போது தண்ணீர் திறந்துவிடும் சத்தம் கேட்டது. எனவே, அவள் கை ஏதாவது அறுத்திருப்பாளோ என்று எண்ணிணோம். அவருடைய உறவினர்கள் பலருக்கு கால் செய்தும், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. எனது மக்கள் உயரம் குறைவுதான். எனவே, அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. எனது மகள் இறப்பிற்கு நியாயம் வேண்டும்” என சுருதியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த சுருதியின் மாமியார் செண்பகவல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து, அவர் சிகிச்சையில் உள்ளார்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 447

    0

    0