பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதிய கார் : பதற வைக்கும் ஷாக் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan25 May 2024, 8:58 pm
வேலூர் மாவட்டம் அரியூர் மலைக்கோடியில் இருந்து பென்னாத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவாரம்பாளையம்.
இப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பென்னாத்தூரைச் சேர்ந்த ரேக்கா(32) என்ற பெண் தனது இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருக்கும் போது, அதே பங்கிற்கு பெட்ரோல் போட வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரேக்கா மீது மோதியுள்ளது.
இதில் ரேக்காவின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் பெட்ரோல் பங்கின் இயந்திரம் உடைந்து விழுந்துள்ளது.
பின்னர் காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்த ரேக்காவை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.