பேருந்தில் ஏற முயன்ற பெண் தூய்மை பணியாளர் வெட்டிப் படுகொலை.. மர்மநபர் தப்பியோட்டம் : தூத்துக்குடியில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 9:11 am

பேருந்தில் ஏற முயன்ற பெண் தூய்மை பணியாளர் வெட்டிப் படுகொலை.. மர்மநபர் தப்பியோட்டம் : தூத்துக்குடியில் பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட தனது மூன்று குழந்தைகளுடன் கனகா மஞ்ச நீர் காயலில் வசித்து வந்து தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில் கனகாவிற்கும் பசுவந்தனையை சேர்ந்த ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தனியார் பேருந்து மூலம் மஞ்ச நீர் காயலில் இருந்து தூத்துக்குடிக்கு பணிக்கு வந்த கனகா தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது மறைந்திருந்த நபர் தனது கையில் வைத்திருந்த அருவாளால் கொடூரமாக கனகாவை கழுத்தில் வெட்டிவிட்டு நடந்து சென்றுள்ளார்.

இதை அடுத்து சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகாவை 108 வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர் என தெரிவித்தனர். இதையடுத்து தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஒரே வாரத்தில் இரண்டு பெண்கள் பேருந்து நிறுத்தத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!