28 வயதுப் பெண்ணுக்கு வலிப்பு வந்த போது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தி காயம் கை கால்கள் செயலிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்று 28 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கழுத்தின் முன் பகுதியில் இரும்பிலான கம்பி ஒன்று குத்திய நிலையில் கை கால்களின் இயக்கம் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வலிப்பு வந்தபோது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தியதாக அவருடன் வந்த உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை முடிவில் கழுத்தில் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது மூச்சுக் குழாய் உணவு குழாய் மற்றும் ரத்த நாளங்களில் மிக அருகில் பாய்ந்து தண்டுவட எழும்பினை துளைத்து தண்டுவடத்தில் குத்தி இருப்பது தெரிய வந்தது.
மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்களின் ஆலோசனைப்படி நரம்பியல் அறுவை சிகிச்சை இதய அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து கழுத்தில் பாய்ந்த கம்பியை நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி கை கால்கள் இயக்கம் சீரடைந்து அதன் பின்னர் வீடு திரும்பி உள்ளனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினர்களை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா வெகுவாக பாராட்டினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.