ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து.. அதிர்ந்து போன தலைநகரம் : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 10:55 am

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்மணிக்கு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இரவில் ரெயிலுக்காக காத்திருந்த தமிழ்ச்செல்வியை அடையாளம் தெரியதா மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

கத்திக்குத்தில் காயமடைந்த பெண் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?