வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து..விக்கிரவாண்டியில் பரபரப்பு : போலீஸ் அதிரடி ஆக்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 5:13 pm

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் டி.கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பளிப்பதற்காக வரிசையில் நின்றுக் கொன்றிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதில் காயமடைந்த அந்த பெண் அலறியுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து அவர் வாக்களித்தார்.

பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணின் முன்னாள் கணவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!