கணவனை இழந்த பெண் அடித்துக் கொலை : கள்ளக்காதலால் அரங்கேறிய பயங்கரம்..!!!
Author: Udayachandran RadhaKrishnan2 March 2023, 9:04 pm
திண்டுக்கல்லில் கள்ளத்தொடர்பு காரணமாக கட்டிட பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள மாலைப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்த செல்லமணி. 45 வயது பெண்மணி இவருக்கு திருமணமாகி இவரது கணவர் இறந்த நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சித்தன் , சுந்தர் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு இவர் தினமும் கட்டிட தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கணவர் இல்லாததை அறிந்த உடன் பணி புரியும் கட்டிட தொழிலாளிகள் செல்ல மணியுடன் பழக்கவழக்கம் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை கல்லூரி சென்று வீடு திரும்பிய இரண்டாவது மகன் சுந்தர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அம்மா செல்லமணி தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்ததை அறிந்த சுந்தர் உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலிசார் விசாரணை செய்து இறந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி குறித்து போலீசார் திவ்விய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்