வேலையை முடித்து வீடு திரும்பிச் சென்ற பெண்ணிடம் தாலி பறிப்பு : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 12:00 pm

வேலையை முடித்து வீடு திரும்பிச் சென்ற பெண்ணிடம் தாலி பறிப்பு : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பக்தவச்சலம் தெருவில் அரசு மருத்துவமனை அருகே சவேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் சட்டென்று திரும்பி கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் தாலி சங்கிலியை அறுத்துகொண்டு தப்பி சென்றனர்.

ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பக்தவச்சலம் தெருவில் சில இடங்களில் யார் வருகிறார் யார் போகிறார் என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு இருட்டாக இருக்கும்.

இந்த தெருவில் தான் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால் சிசிடிவி கேமரா அரசு மருத்துவமனையில் மட்டும் தான் இருந்தது.

அதிலும் செயினை அறுக்கும் நபர்கள் சரியாக தெரியவில்லை காவல்துறை சரியான முறையில் இரவில் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை கண்காணிப்பதும் இல்லை என்பதாலும் போதிய கண்காணிப்பு கேமராக்கள் சரியாக பொருத்தப்படாததால் இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!