கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2025, 6:02 pm

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் ஹேமலதாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் இந்திரா நகர் அருகே உள்ள பிரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ஜெயந்தனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வந்த நிலையில் கடம்பத்தூர் காவல் நிலையம் முன்பு ஹேமலதா தள்ளுவண்டி கடையில் ஜூஸ் சமோசா பஜ்ஜி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருடன் சேர்ந்து ஜெயந்தனும் தள்ளுவண்டிக் கடை வியாபாரத்தை பார்த்து வரும் நிலையில் கடம்பத்தூர் (BDO) அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் விசாலி என்பவர் அவ்வழியே செல்லும்போது ஹேமலதா தள்ளுவண்டி கடையில் ஜூஸ் குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தி ஜூஸ் குடிக்க வந்துள்ளார்.

இதையும் படியுங்க: கோர்ட்டை சீமான் மதிப்பதே இல்லை.. பாட்டெழுதவும், படம் பார்க்க மட்டும் போவாரா? நீதிபதி ஆட்சேபம்!

அப்போது அந்த தள்ளுவண்டி கடையில் ஜெயந்தன் இருப்பதைக் கண்டு ஜெயந்தனிடம் நான் உன்னுடன் பள்ளியில் படித்த தோழி ஞாபகம் உள்ளதா என கேட்க ஜெயந்தனும் ஞாபகப்படுத்தி ஆம் என இருவரும் பேச தொடங்கியுள்ளனர்.

விஷாலி கணவர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் நிலையில் தனது குடும்ப கஷ்டத்தையும் கணவர் தன்னை கண்டு கொள்வதில்லை எனவும் ஜெயந்தனிடம் இருவரும் மாறி மாறி தங்களது குடும்ப கஷ்டத்தை தெரிவித்துக் கொண்டு நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயந்தன் விஷாலியை தனது வீட்டிற்கு வரும்படியும், தான் தாய் இல்லாமல் தவிப்பதாகவும் இரக்கம் வரும் அளவிற்கு பேசி விசாலியை வீட்டிற்கு வரவழைத்த நிலையில் ஜெயந்தன் விஷாலி மடியில் படுத்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும் அடுத்த கட்டத்திற்கு போய் இருவரும் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் திடீரென கதவைத் திறந்து உள்ளே வந்த ஜெயந்தனின் கள்ளக்காதலி ஹேமலதா வீட்டுக்குள் நுழையும் போதே தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜெயந்தனிடம் நீ எப்படி இது போல் நடந்து கொள்வாய் என தன்னை நல்லவள் போல் காட்டிக் கொண்டு விசாலியை சரமாரியாக தாக்கி உடலில் இருந்த மீதி துணியை உருவி கையில் வைத்துக் கொண்டுள்ளார்.

இதை அடுத்து விசாலியிடம் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் சங்கிலியையும் அடித்து பிடுங்கிக் கொண்டு அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இதனிடையே விஷாலியின் கணவர் உறவினர்கள் உள்ளிட்டவர்கள் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டும் உடைகள் தரமாட்டேன் என கூறிய நிலையில் விஷாலி ஹேமலதாவிடம் கதறி அழுத நிலையில் விஷாலியின் உடைகளை வாசலுக்கு வெளியே தூக்கி எறிந்து சென்று எடுத்துக்கொள் என தெரிவித்த நிலையில் விஷாலி வெளியே செல்வதற்கு தயக்கம் காட்டிய நிலையில் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு வெளியே நிர்வாணமாக சென்று உடைகளை எடுத்து மாட்டிக்கொண்டு விட்டால் போதும் என்ற நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதை அடுத்து விசாலியிடம் வாங்கிய அவரது கணவன் தொலைபேசி எண்ணை கொண்டு உனது மனைவி எனது ஜெயந்தன் வீட்டில் அம்மா படத்திற்கு முன்பு வைத்திருந்த நகை பணம் உள்ளிட்ட அவளை திருடி சென்று விட்டார்.

அதை திருப்பி தரும்படியும் இல்லையென்றால் ஜெயந்தனுடன் உனது மனைவி நிர்வாணமாக இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என ஜெயந்தனும் ஹேமலதாவும் கூறியதால் அதிர்ந்து போன விஷாலின் கணவர் தான் கடன் வாங்கியாவது பணத்தை தந்து விடுகிறேன் எனது மனைவி அப்படி செய்திருக்க மாட்டார்.

இருந்தாலும் பரவாயில்லை அந்த நிர்வாண வீடியோவை டெலிட் செய்து விடுங்கள் நானும் எனது மனைவியும் உங்கள் பேச்சுக்கே வரமாட்டோம் என கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் முற்ற ஹேமலதா உன் மனைவி மீது நான் எஸ் பி அலுவலகத்தில் புகார் தருகிறேன் என கூறிய நிலையில் பாதிக்கப்பட்டது எனது மனைவி நீங்கள் என்ன புகார் தருவது நானே தருகிறேன் என கூறியதால் அதிர்ந்து போன ஹேமலதா அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்கூட்டியே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கள்ளக்காதலன் ஜெயந்தன் வீட்டில் தனது அம்மா படத்தின் வைத்திருந்த நகை பணங்களை விஷாலி திருடி சென்று விட்டார் மீட்டுத் தரும்படி புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் தாலுகா ஆய்வாளர் விஷாலி மற்றும் அவரது கணவரை அழைத்து விசாரணை செய்த போது ஹேமலதா மற்றும் அவரது கள்ளக்காதல் செய்த அட்டகாசங்களும் பணம் பறிக்கும் முயற்சியும் வெளிப்படவே உடனடியாக விசாலியிடம் இருந்து பறித்த ஒன்றறை சவரன் செயினை கொடுக்கும்படி ஹேமலதாவிடம் தெரிவித்த நிலையில் வீட்டிற்குச் சென்று எடுத்த வருகிறேன் என கூறிச் சென்றவர் மாயமானார்.

இதை அடுத்து ஜெயந்தன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த நிலையில் தலைமறைவாக உள்ள ஹேமலதாவை காவல்துறையினர் தேடி வருவதாக ஒப்புக்கு கதை சொல்லி வருகின்றனர்.

மேலும் கடம்பத்தூர் காவல் நிலையம் முன்பு தள்ளுவண்டி கடையில் வைத்து நடத்தி வரும் ஹேமலதா கடம்பத்தூர் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்களும் தன்னுடன் பேசி ஒன்றாக இருக்கும் வீடியோ இருப்பதாகவும் ஹேமலதாவை கைது செய்தால் வெளியே வந்து அந்த வீடியோ ஆடியோக்களை வெளியில் விட்டால் காவல்துறையினரின் மானம் காற்றில் பறக்கும் என யோசித்த காவல்துறையினர் ஹேமலதாவை தலைமறைவாகவே காட்டி வருகின்றனர்.

மேலும் ஹேமலதா இதுபோன்ற இளைஞர்களுடன் சென்னை பப்பில் அரை நிர்வாணமாக ஆடி குத்தாட்டம் போடும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கொடுத்தால் வீடியோவை டெலிட் செய்வேன் என்ற ஆடியோவும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட ஜெயந்தன்

இருப்பினும் ஹேமலதாவை தலைமறைவாகவே காட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்விக்கு இதுவரை முற்றுப்புள்ளி இல்லை எனவும் இது குறித்து திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது ஜெயந்தனை கைது செய்து சிறையில் அடைத்த தால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் மேலும் ஹேமலதா பிணை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் வரும் எட்டாம் தேதி வழக்கு தள்ளுபடி ஆகும் பட்சத்தில் ஹேமலதாவை நிச்சயமாக கைது செய்வோம் எனவும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது ஹேமலதாவை கைது செய்ய வாய்ப்பில்லை என்ன கூறியுள்ளார்.

பகலில் தள்ளுவண்டி கடையில் வியாபாரம் இரவில் சென்னையில் பப்பில் நண்பர்களோடு ஆட்டம். நிர்வாண வீடியோக்களை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பது உள்ளிட்ட அட்டகாசங்களில் ஈடுபட்டு வரும் ஹேமலதாவை கைது செய்வார்களா என்ற பரபரப்பில் கடம்பத்தூர் மக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருவள்ளூர் நகர காவல் நிலையம் மற்றும் புள்ளரம்பாக்கம் காவல் நிலையங்களில் இது போன்ற மோசடி வழக்குகளில் புகார் அளித்த ஹேமலதா விற்க்கு ஆதரவாக செயல்படாத முன்னாள் புள்ளரம்பாக்கம் உதவி ஆய்வாளர், இதேபோல் நகர காவல் ஆய்வாளர் திருவள்ளூர் டிஎஸ்பி உள்ளிட்டவர்கள் மீதும் புகார் அளித்துள்ளதும் இதற்கு முன்னால் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் மீது எஸ்சி எஸ்டி பிரிவில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

a woman who takes a nude video and threatens

காவல்துறையினரையே ஒரு கலக்கு கலக்கிய ஹேமலதாவை இதுவரை காவல் துறையினர் பிடிக்கவில்லை என்பது காவல்துறையினரின் கையாலாகாத தனம் என பொதுமக்கள் புலம்புவது குறிப்பிடத்தக்கது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?
  • Leave a Reply