போலி மருத்துவரிடம் சிகிச்சை பார்த்த பெண் திடீர் உயிரிழப்பு : குடியாத்தத்தில் பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 6:35 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரின் மனைவி பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள பெண் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் மேலும் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார் அந்த பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது

இதனிடையே போலி மருத்துவரின் சிகிச்சையால் தான் அந்த பெண் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலானது

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் அந்த போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்

உத்தரவின் பேரில் குடியாத்தம் போலீசார் குடியாத்தம் பிச்சனூர் பேட்டியை சேர்ந்த மருத்துவ படிப்பு படிக்காமல் 12ம் வகுப்பு படித்து ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பிரியா (வயது40) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த பிரியங்கா என்பவருக்கு மருத்துவம் பார்த்ததாக ஒப்புக்கொண்டார்

மேலும் போலி மருத்துவர் பிரியாவை கைது செய்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால் தான் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 289

    0

    0