நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து : தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 7:37 pm

திருச்சி பீமநகரை பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் இவரது மனைவி ரூபி(38).
இவர் பஞ்சப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம் போல் பணிகளை முடித்த ரூபி கல்லூரி வளாகத்தில் இருந்து வீடு திரும்பிய போது, வளாகத்திற்குள் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ரூபியின் மீது மோதி தூக்கி வீசி விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது.

தூக்கி வீசப்பட்ட ரூபி பலத்த காயமடைந்தனர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அனால் சிகிச்சை பலனின்றி ரூபி உயிரழந்தார்.

https://vimeo.com/819863635?share=copy

தூக்கி வீசப்பட்ட ரூபி சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சீனிவாசனை(42) மணிகண்டம் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!