Dairy Milk சாக்லேட் Lover-ஆ நீங்க..? மளிகைக்கடையில் வாங்கிய சாக்லேட்டில் நெளிந்த புழு ; வாடிக்கையாளர் அதிர்ச்சி!!
Author: Babu Lakshmanan3 April 2023, 12:24 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பெரும் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் கரூர் வைசியா வங்கி தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன்.
இவர் 85 ரூபாய் மதிப்புள்ள டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, சாக்லேட் கவரை பிரித்த போது, புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானர்.
கவரின் வெளிப்புறத்தில் உள்ள காலாவதி தேதியை பார்த்த போது, அதில் காலாவதி தேதி செப்டம்பர் மாதம் வரை உள்ளதாக பொறிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டைரி மில்க் சாக்லேட்டில் புழு நெளிந்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.