மலைக்கோட்டையில் தரிசனம் செய்ய சென்ற இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 5:14 pm

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் மோனிஷா வயது 24. இவர் தனது தந்தை கிருஷ்ணகுமார் மற்றும் தாயார் ஹேமாவதி தங்கை திவ்யா ஆகியோருடன் தேர்வு எழுத வந்த நிலையில், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று வந்துள்ளார்.

அப்போது மலைக்கோட்டை படிக்கட்டு வழியாக சென்றபோது பாராவாசல் முன்பு களைப்பில் மயங்கி உள்ளார் மருத்துவர் மோனிஷா. அதன் பின்னர் அவரால் மலைக்கோட்டை மேலிருந்து கீழே இறங்க முயற்சித்தும் முடியாத நிலையில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கண்ட்டேண்மென்ட் தீயணைப்புத்துறையினர் அவரை பத்திரமாக போர்வையில் டோலி போல் தூக்கி வந்து கீழே அடிவாரத்தில் இறக்கி அனுப்பி வைத்தனர்.

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனத்திற்காக வந்த இளம் வயது பெண் மருத்துவர் மயங்கி விழு விழுந்த நிலையில் அவரை தீயணைப்புத் துறையினர் போர்வையில் டோலி போல் தூக்கி வந்து ஆசுவாசப்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்த சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை சுற்றுலா பயணிகள் தினம் தோறும் ஏராளமானோர் மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்தும் திருச்சி மாநகரின் அழகை ரசித்தும் வரும் நிலையில் 24 வயது ஆன இளம் வயது மருத்துவர் மயங்கி விழுந்த சம்பவம் அங்கிருந்து பொதுமக்களிடையே அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தியது

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 271

    0

    0