பைக் ஷோரூமில் மூட்டை மூட்டையாய் ரூ.1 நாணயம்…எத்தனை லட்சம் தெரியுமா?: யூடியூபரால் ஷாக் ஆன ஊழியர்கள்..!!

Author: Rajesh
26 March 2022, 10:09 pm

சேலம்: சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2.50 லட்ச ரூபாய்க்கு 1 ரூபாய் நாணயம் கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிசிஏ பட்டதாரியான பூபதி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில் புதிதாக பூ டெக் எனும் யூடியூப் சேனலை துவங்கி பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைப்பர்களை கொண்டு பணம் சம்பாதித்து வந்த நிலையில் தனது யூடியூப் வியுவர்ஸ்களுக்காக வித்தியாசமான வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் 2.50 லட்சம் ரூபாய்க்கு 1 ரூபாய் நாணயமாக மாற்றி தன் ஆசைப்பட்ட இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார்.

இந்த 1 ரூபாய் நாணயங்களை பெறுவதற்காக கடந்த மூன்றரை மாதங்களாக பல்வேறு வங்கிகள் கோவில் உண்டியல் பணம் என பழனி, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து 1 ரூபாய் நாணயங்களை பெற்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி