பிரபலமடைய பேய் வேடத்தில் உலாவிய இளைஞர் : அலறிய பெண்கள், குழந்தைகள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2024, 7:44 pm

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில், இன்று, மாலை 5:00 மணி அளவில், சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு படம் வரைந்து அணிந்து கொண்டு, பேய் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து, பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உலாவினார்.

இதை இளைஞர்கள் சிலர் படம் பிடித்தனர். வாழப்பாடியில் மாலை நேரத்தில் திடீரென பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் பேய் வேடத்தில் உலவியதால் பெண்களும், குழந்தைகளும் அலறினர்.

யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரபலமாவதற்காக பேய் இடத்தில் மக்கள் மத்தியில் உலாவியதாக தெரிவித்த அந்த இளைஞர் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. இந்த இளைஞர் குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 257

    0

    0