கோவிலில் கூழ் காய்ச்சும் போது இளைஞருக்கு திடீர் வலிப்பு : கொதித்து கொண்டிருந்த கூழ் பாத்திரத்தில் விழுந்த சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2022, 8:58 pm
மதுரை : கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடிரென வலிப்பு வந்ததால் பாத்திரத்தில் விழுந்து இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் சோகதை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கப்பட்டது.
அப்பொழுது கூல் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்ற இளைஞருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டபோது கொதித்துகொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார்.
அப்போது அதீத வெப்பத்துடன் இருந்த கூலானது முருகனின் உடல் முழுவதும் கொட்டியதால் காயத்தால் துடித்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இளைஞர் முருகனுக்கு 65% தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூல் காய்ச்சும் பாத்திரத்தில் இளைஞர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.