65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி : காமக்கொடூர வாலிபர் கைது…

Author: kavin kumar
21 January 2022, 6:42 pm

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 75 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி வ.உ.சி தெருவில் வீட்டில் தனியாக 65 வயதான பாப்பா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் மூதாட்டி வீட்டில் இரவில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை கற்பழிக்க முயன்றுள்ளார். பின்னர் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்து விட்டு மணிகண்டன் தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த மூதாட்டி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மூதாட்டியை கற்பழிக்க முயன்றதாகவும் , கொலை செய்ய முயன்றதாகவும் மணிகண்டன் என்ற வாலிபரை கூமாப்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!