கள்ளக்காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் : கொலை செய்துவிட்டு காதலன் செய்த செயல் : தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 3:47 pm

கள்ளக்காதலியை கொலை செய்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள காலே கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (48). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (35) என்பவருடன் கள்ளத்தனமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். லட்சுமிக்கு திருமணமாகி முருகன் என்ற கணவர் உள்ளார். முருகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்து, முனிராஜும், லட்சுமியும் கோவிலுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, மாதேஸ்வரன் மலை அருகே உள்ள நாகமலை, வனப்பகுதியில் லட்சுமியை கல்லால் தாக்கி, கொலை செய்து, அதை வீடியோ பதிவு செய்து தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

தொடர்ந்து, முனிராஜும் அதே இடத்தில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இது சம்பந்தமாக மாதேஸ்வரன் மலை போலீசார், இருவர் பிரேதத்தையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். லட்சுமியின் உடல் மாதேஸ்வரன் மலை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறந்த முனிராஜின் உடல், சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முனிராஜ் வாட்ஸ் அப்பில் வைத்த, கொலை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 501

    0

    0