சிறுமியை காதலித்து தாலி கட்டி ஒரு நாள் இரவு மட்டும் குடும்பம் நடத்தி எஸ்கேப்பான இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 9:34 am

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 25). இவர் அதே பகுதியில் சொந்தமாக வெல்டிங் சாப் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இளைஞர் விஸ்வநாதனும், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாற்று சமுகத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி இருவரும் ஊரை விட்டு வெளியேறிய நிலையில் 23-ம் தேதி விஸ்வநாதனின் நண்பர்கள் உதவியுடன் குடியாத்தத்தில் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அன்று இரவு ஒன்றாக இருந்துவிட்டு மறுநாள் அந்த சிறுமியை குடியாத்தம் பேருந்து நிலையத்தில் நிற்க்கும் படி கூறிவிட்டு சென்ற விஸ்வநாதன் அன்று முழுவதும் திரும்பி வராததை அறிந்த சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமியை மீட்டு அழைத்து சென்ற உறவினர்கள் இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர். குழந்தை திருமணம், சிறுமியை கடத்தி செல்லுதல், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒடுக்கத்துரை சேர்ந்த இளைஞர் விஸ்வநாதனை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?