15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்… வைரலான வீடியோ… அதிரடியாக நடந்த டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 10:44 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 15 வயது சிறுமியை 22 வயதுடைய பாலாஜி என்ற இளைஞர் காதலித்து திருமண ஆசை காட்டி அழைத்து சென்று ஒரு கோவிலில் வைத்து அந்த சிறுமிக்கு தாலிகட்டியுள்ளார்.

அதன். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் தாய் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த சிறுமியை இளைஞர் அழைத்து சென்று ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது
இதை வைத்து போலிசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமியை அழைத்துச் சென்று தாலி கட்டிய இளைஞர் பாலாஜி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து சிறுமியின் தாய் கூறிய போது, என் மகளை மட்டும் மீட்டு கொடுத்துள்ளனர்.அந்த அந்த இளைஞரை போலிசார் பிடிக்கவில்லை அந்த இளைஞரை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 624

    0

    0