இளம்பெண்ணிடம் மொபைல் நம்பர் கேட்ட இளைஞர் தலை துண்டித்துக் கொலை.. இரு சமூக மோதலால் பதற்றம்..!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 11:21 am

இளம்பெண்ணிடம் மொபைல் நம்பர் கேட்ட இளைஞர் தலை துண்டித்துக் கொலை.. இரு சமூக மோதலால் பதற்றம்..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி சேர்ந்த சக்திவேல் என்ற வேலு வயது(25) இவர் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுனராக உள்ளார், அதே பகுதியில் கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி சேர்ந்தவர் வேலு வயது(20) வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் அரசு கட்டிட காண்டிராக்டர் கிருஷ்ணனிடம் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை நடுப்பட்டியில் நடைபெற்று வரும் சாக்கடை கட்டிடப்பணிக்கு டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதி பெண்கள் டேங்கர் லாரியில் தண்ணீர் பிடித்துள்ளார்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களிடம் கரியாம்பட்டியை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுனர் சக்திவேல் என்ற வேலு ஒரு இளம் பெண்ணின் செல் நம்பர் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்பெண் உடனடியாக தனது உறவினர் விஜயிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த விஜய் தனது உறவினர் வேலுவை பார்த்து கரியாம்பட்டியைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுனர் சக்திவேல் என்ற வேலு நமது ஊர் பெண்ணிடம் போன் நம்பர் கேட்டுள்ளார் அதற்கு நீங்கள் ஏன் சத்தம் போடவில்லை என கூறி சத்தம் போட்டு உள்ளார்.

இதனையடுத்து கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேலும் நடுப்பட்டியைச் சேர்ந்த வேலுவும் ஒரேயிடத்தில் வேலை பார்ப்பதால் அதுகுறித்து ஓனர் கிருஷ்ணனிடம் கூறியதாக கூறப்படுகிறது.

உடனடியாக ஓனர் கிருஷ்ணன் கரியாம்பட்டி சக்திவேலுவை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கரியாம்பட்டி சக்திவேல் நேற்று மாலை நடுப்பட்டியைச் சேர்ந்த வேலுவை நைசாக பேசி மது குடிக்க காட்டு பகுதிக்கு அழைப்புச் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அங்கு நடுப்பட்டி வேலுவை, சக்திவேலு, மருதை மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த இளம் பெண்ணின் செல்போன் என்னை நீயே வாங்கிக்கொடு என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

அதிலிருக்கு தப்பி வந்த வேலு நடந்த சம்பவத்தை நடுப்பட்டி மக்களிடம் கூறியதை யடுத்து அவரது உறவினர்கள் விஜய்,அழகுபாண்டி ஆகியோர்கள் அவ்வழியாக வந்த சக்திவேலுவை கண்டித்துள்ளனர்.

இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராரில் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர் இதில் கரியாம்பட்டி சக்திவேல் தரப்பினரால் நடுப்பட்டியைச் அழகுபாண்டி தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு மண்டை மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு அழகுபாண்டியை நிலக்கோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால் அழகுப் பாண்டியின் தலையில் பலத்த காயம் என்பதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ,

இதேபோல கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல், மருதை மற்றும் சிலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலக்கோட்டை காவல்துறையினர் திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த சக்திவேல் மருதை உட்பட 4 -இளைஞர்களை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: பயணி தொடர்ந்த வழக்கு : ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!!

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடுப்பட்டி சேர்ந்த கூலி தொழிலாளி ஆண்டார்(55) அவரது வீட்டின் முன்பு வாசலில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் திடீரென புகுந்து ஆண்டாரை சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்து துண்டித்து படுகொலை செய்தனர்,இதனால் கிராமம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது உடனடியாக கரியாம்பட்டி, நடுப்பட்டி பகுதியில் 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இரு வேறு சமூக இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கிராமம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்……

இரு சமூகத்திற்கிடையே ஏற்கனவே மோதலில் இருந்து வந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிரவா கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…