பானிபூரி சாப்பிட்ட இளைஞர்… இரவெல்லாம் வயிற்றுவலியால் தவிப்பு : அதிகாலையில் நடந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 11:23 am

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு 10 ஆம் வகுப்புவரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 7 ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகேயுள்ள அரவங்குறிச்சியில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்து படுத்து விட்டார். இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர் வேலுவை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

தீவிர சிகிச்சையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நத்தம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். பானி பூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!