பாதயாத்திரையாக வந்த இளைஞர்.. வலிப்பு ஏற்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் : பழனி கோவிலில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 7:52 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சரளப்பட்டியை சேர்ந்த அகில் குமார் வயது ( 24 )என்ற பக்தர் பாதயாத்திரையாக வருகை தந்துள்ளார்.

பழனி அருகே உள்ள இடும்பன் குளத்தில் புனித நீராடி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளிக்கபட்டு அருகில் இருந்த பக்தரின் கார் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உடன் வந்த பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…
  • Close menu