திருநங்கையிடம் தகராறு செய்த இளைஞர்.. பணம் பறித்து ஓட்ட்ம் : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 8:20 pm
trnas
Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த திருநங்கைகளிடம் ஒரு இளைஞர் பணம் பறித்து தகராறு செய்து திருநங்கை ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்ட சக திருநங்கைகள் ஒன்று கூடி அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது அந்த இளைஞர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

இருப்பினும் விடாமல் துரத்திய திருநங்கைகள் ஒரு வழியாக நியு டவுன் ரயில் தண்டவாளத்தில் கீழ் உள்ள கழிவு நீர் கால்வாயில் மூழ்கி தப்பி ஓடிய அந்த இளைஞரை திருநங்கைகள் ஒன்று சேர்ந்து பிடித்து கட்டி வைத்து போலிசாரை வரவழைத்து அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரித்த போது தான் இதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக சேலம் பகுதியில் வசித்து வருவதாக கூறிய பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த இளைஞசரை அழைத்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 132

0

0