வக்கீல் வண்டிய எப்படி தடுத்து நிறுத்தலாம் : வாக்குவாதம் செய்து போலீசாரின் செல்போனை பறித்து ஓடிய வாலிபர்.. விசாரணையில் பகீர்.! (வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan11 ஜூன் 2022, 7:34 மணி
மதுரை : வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளராக சின்ன கருத்த பாண்டி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் சக போலீஸ் ஏட்டு ஆல்வின் ஜெபஸ்டினுடன் தல்லாகுளம் வணிக வளாகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பைக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் இருந்தனர். பைக்கை ஓட்டி வந்த இளைஞர் ஹெல்மெட் அணியாததால் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், இது வழக்கறிஞரின் வண்டி, நீங்கள் எப்படி தடுத்து நிறுத்தலாம் என கேட்டார். இதைத்தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் ஏட்டு ஆல்வின் ஜெபஸ்டின் அந்த வாலிபரிடம் போக்குவரத்து ஆவணங்களை கேட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் ஆல்வினை மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். உடனே சப் இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தபாண்டி மற்றும் போலீசார் பைக்கில் வேகமாக துரத்தி சென்று வாலிபரை பிடித்தனர்.
இதையடுத்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டி பைக்கை ஓட்டியது யானைக்கால் பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் வசந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
0
0