பணம் கொடுக்காமல் பெட்ரோல் போட கூறிய இளைஞர்.. மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து : பெட்ரோல் பங்கில் பரபரப்பு சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 4:21 pm

புதுச்சேரியில் உள்ள திருவாண்டார் கோவில் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அங்கு பெட்ரோல் போடுவதற்காக ராஜா எனும் நபர் குடுத்துவிட்டு வந்துள்ளார். அப்போது பணம் கொடுக்காமல், பெட்ரோல் போட கூறியுள்ளார். இதற்கு அங்கிருந்த ஊழியர் சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா தனது கையில் வைத்திருந்த கத்தியால் ஊழியர் சரவணனை தாக்கினார். இதில் சரவணன் படுகாயம் அடைந்தார். கத்தியால் தாக்கிவிட்டு ராஜா தப்பியோடிவிட்டார்.

பிறகு, அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் ஸ்ரீராமுலு அப்பகுதியில் உள்ள போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து ராஜாவை கைதுசெய்தனர். மேலும் ராஜா மீது ஏற்கனவே சில வழக்குகளும் அவர் மீது உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!