2 நாட்கள் ஆண் நண்பருடன் உல்லாசம்.. திடீரென லாட்ஜில் சரிந்த இளம்பெண்.. சென்னையில் பரபரப்பு!

Author: Hariharasudhan
10 December 2024, 3:10 pm

சென்னையில், தனது ஆண் நண்பர் உடன் இருந்துவிட்டு, லாட்ஜில் இருந்த இளம்பெண் திடீர் உடல் உபாதைகளால் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: திருச்சி மாவட்டம், செம்பட்டு திருவலச்சிபட்டியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் சென்னையில் பியூட்டிஷியனாக பயிற்சி பெற்று, வெளிநாட்டிற்குச் சென்று அங்கு சிறிது காலம் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி உள்ளார்.பின்னர், தனது சொந்த ஊரான திருச்சியிலேயே அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார்.

இதற்காக, ஒவ்வொரு மாதமும் தனது பணிக்குத் தேவையான பொருட்கள் வாங்க அவர் சென்னைக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். பின்னர், சூளைமேடு சண்முகம் சாலையில் உள்ள கில் நகர் 2வது தெருவில் அறை எடுத்து வசித்து வரும் தனது ஆண் நண்பர் முகமது நபிக் (31) என்பவர் உடன் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளார்.

trichy beautician died in Chennai

இதனைத் தொடர்ந்து, சூளைமேட்டில் உள்ள தனது ஆண் நண்பரின் அறைக்குச் சென்ற அப்பெண், அவருடன் 2 நாட்கள் இருந்துள்ளார். அப்போது அவருடன் அளவுக்கு அதிகமாக பீர் குடித்தும், அதிக அளவில் சிகரெட் பிடித்தபடி இருந்து வந்துள்ளார். அதேநேரம், அப்பெண்ணுக்கு சிறு வயதிலே நெஞ்செரிச்சல் பிரச்னைக்காக மாத்திரைகள் எடுத்து வந்துள்ளார்.

ஆனால் சம்பவத்தன்று, சாப்பிட்ட பிறகு உட்கொள்ள வேண்டிய மாத்திரையை, சாப்பிடுவதற்கு முன்பாகவே உட்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆண் நண்பருடன் நவம்வர் 7ஆம் தேதி காலை 11 மணி வரை இருந்துவிட்டு, கோயம்பேட்டில் பணியாற்றும் தனது தோழி ஒருவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தனியார் லாட்ஜுக்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க: பல்லடத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. தம்பதி சடலமாக மீட்பு!

இவ்வாறு லாட்ஜுக்கு வந்த சிறிது நேரத்தில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. பின்னர், சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதனையடுத்து, அவர் உடனடியாக கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோழி அனுமதித்தார்.

அங்கு, அவரது இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாகவும், உடனே மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர். எனவே, அவரை அவசர அவசரமாக கார் மூலம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

Trichy Young woman died in Chennai

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இந்து இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து அறிந்து வந்த பாண்டிபஜார் போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும், அப்பெண்ணுடன் இருந்த தோழி மற்றும் அப்பெண்ணின் ஆண் நண்பரான முகமது நபிக் ஆகியோரை அழைத்து சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 160

    0

    0

    Leave a Reply