உச்சி வெயிலில் கைக்குழந்தையுடன் அவதிப்பட்ட இளம்பெண் : போக்குவரத்து காவலர் செய்த நெகிழ்ச்சி செயல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 1:57 pm

கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும் தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார்.

அப்போது இளம் பெண் வெயிலின் தாக்கத்தால் அப்பெண் அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நின்றார். அப்போது இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமார் (27) கைக்குழந்தையை வாங்கி கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கையில் அமரக்கூறி தண்ணீர் வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும் சுமார் 20 நிமிடங்கள் குழந்தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார்.

கடும் வேலைக்கு இடையே போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்