என்ன நெஞ்சழுத்தம்.. நடுரோட்டில் பீர் அருந்திய வாலிபர் : பெண்கள் முன் கெத்து காட்டிய ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 4:24 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் லண்டன்பேட்டை பகுதியில் மிகவும் பரபரப்பான சாலையான சிக்னலில் வாலிபர் ஒருவர் அமர்ந்துகொண்டு மதுபாட்டில் உடன் சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மது அருந்தி கெத்து காட்டினார்.

இந்த சம்பவத்தை கண்ட பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நடுரோட்டில் மது அருந்தி சீன் போட்டுக் கொண்டிருந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரனையில் இந்த வாலிபர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (24) எனவும், பெங்களூரில் ஹோட்டலில் பணியாற்றி வருவதும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். நகரின் பரபரப்பான முக்கியமான சிக்கனில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களிடையே முகம் சுளிக்கும் வகையில் மது பாட்டிலுடன் அமர்ந்து மது அருந்தி வைத்துக் கொண்டு சீன் போட்ட இந்த நபரால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 286

    0

    0