தவெகவுக்கு தாவல்? ஆதவ் அர்ஜூனா ஹிண்ட்.. திமுக அமைச்சரின் பல்டி!

Author: Hariharasudhan
16 December 2024, 12:44 pm

எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள நிலையில், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை: ’எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன்” என தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஆதவ் அர்ஜுனா இன்று (டிச.16) சென்னை விமான நிலையத்தில் வைத்து அளித்த பதில்.

இது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்த பிறகு ஆதவ் அர்ஜுனா அளித்த பதில் ஆகும். முன்னதாக, கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில், வாயஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனராக ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.

அதில், மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும், பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது, கருத்தியல் தலைவர் இனி ஆள வேண்டும் என்று கூறி இருந்தார். அதே மேடையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு திருமாவளவனுக்கு கூட்டணி தரப்பில் எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கும் எனக் கூறினார்.

அப்போது, ஆதவ் அர்ஜுனா ஆரவாரமாக கைதட்டினர். இது திமுக – விசிக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விசிகவில் இருந்து 6 மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார். இதனையடுத்து, திமுகவில் இருந்து திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தனியார் ஊடகத்திற்கு ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்தார்.

EV Velu about DMK Pressure on Thirumavalavan

இந்த நிலையில் தான், நேற்று விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அளித்தார். இவ்வாறு விசிகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் தானே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா குறித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி ஒன்று அளித்தார்.

இதையும் படிங்க: தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா.. ஸ்ரீவி ஆண்டாள் கோயிலின் விளக்கம் என்ன?

அதில், “ஒரு கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும், அந்த கட்சிக்கு கட்டுப்பட வேண்டும். இதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம். ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு, அவருக்கு சரி என்ற அடிப்படையில் எடுத்திருக்கிறார். அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, திமுக அமைச்சர் எ.வ.வேலு, “திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுக்கவில்லை, அவர் நட்பைத் தாண்டி சகோதரப் பாசத்துடன் பழகக் கூடியவர்” எனக் கூறியுள்ளார். ஏனென்றால், அமைச்சர் எ.வ.வேலு தான் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்க வேண்டாம் என திருமாவளவனிடம் கூறியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Actor Soori new film Maaman update பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
  • Views: - 49

    0

    0

    Leave a Reply